/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மிளகாய் சாகுபடி நிறைவு; உழவு பணிக்கு ஆயத்தம்
/
மிளகாய் சாகுபடி நிறைவு; உழவு பணிக்கு ஆயத்தம்
ADDED : பிப் 07, 2025 08:34 PM
நெகமம்; நெகமம், பனப்பட்டியில் மிளகாய் சாகுபடி நிறைவடையும் தருவாயில் இருப்பதால், விவசாயிகள் உழவு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
நெகமம் அருகே உள்ள பனப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில், தென்னை, மிளகாய், தக்காளி, சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில், தற்போது மிளகாய் சாகுபடி நிறைவடையும் தருவாயில் இருப்பதால், அடுத்தபடியாக உழவு மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
பனப்பட்டி விவசாயி கனகராஜ் கூறுகையில், ''5 மாதங்களுக்கு முன், 25 சென்ட் இடத்தில் மிளகாய் பயிரிட்டிருந்தோம். மாதத்தில், 2 அல்லது 3 முறை மிளகாய் பறிப்போம். இதில், ஓரளவு லாபம் கிடைத்தது.
தற்போது, செடியின் ஆயுள்காலம் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், உழவு பணிகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளோம். அதன்பின், தக்காளி பயிரிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.