/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிஎன் ஸ்பார்க்' பாடங்கள் நடத்த கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தேவை
/
'டிஎன் ஸ்பார்க்' பாடங்கள் நடத்த கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தேவை
'டிஎன் ஸ்பார்க்' பாடங்கள் நடத்த கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தேவை
'டிஎன் ஸ்பார்க்' பாடங்கள் நடத்த கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தேவை
ADDED : செப் 12, 2025 10:22 PM
கோவை; தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், கம்ப்யூட்டர் பாடங்களில் உள்ள புரோகிராம்களை மனப்பாடம் செய்து, அதை கம்ப்யூட்டரில் செய்து பார்க்கின்றனர்.
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி, 'ரோபோடிக்ஸ்', செயற்கை நுண்ணறிவு போன்ற உள்ளடக்கங்கள் கொண்ட புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், 6 முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இல்லாதது, எந்த வகையில் மாணவர்களுக்கு பயன் தரும், என, தமிழ்நாடு வேலையில்லா கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இச்சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ஜமுனா ராணி கூறியதாவது: தி.மு.க.எதிர்க்கட்சியாக இருந்தபோது, மாணவர்களுக்கு பிரத்யேக கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், கணினி பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் உறுதியளித்தது.
ஆட்சிக்கு வந்தபின் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்வ சிக் ஷா திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என குற்றம் சாட்டுகிறது. மத்திய அரசு வழங்கிய நிதியை சரியான முறையில் பயன்படுத்தாமல், கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அரசு மறுக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
'8ம் வகுப்பு மாணவர்களால்
ஏ.ஐ.பாடம் கற்க முடியாது'
''6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'டிஎன் ஸ்பார்க்' புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அடிப்படை கணினி அறிவு இல்லாத 8ம் வகுப்பு மாணவர்கள் எப்படி செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்? கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள், எவ்வாறு கணினி சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும்?'' என்று கேள்வி எழுப்புகிறார் ஜமுனா ராணி.