/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் காம்ரேட்ஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி
/
டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் காம்ரேட்ஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி
டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் காம்ரேட்ஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி
டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் காம்ரேட்ஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி
ADDED : ஜூலை 28, 2025 09:33 PM
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி. சி.ஏ.) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டிகள் சி.ஐ.டி., பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்துவருகிறது.
நேற்றைய போட்டியில் ரெயின்போ கே.எம்.பி. கிரிக்கெட் கிளப் அணியும், கோவை காம்ரேட்ஸ் அணியும் மோதின. ரெயின்போ அணி 40.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 134 ரன் எடுத்தது. பிரிதிவ் ராஜ் 55 ரன் எடுத்தார். மஹாராஜா 4 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய கோவை காம்ரேட்ஸ் அணி, 32.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு, 136 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஆறாவது டிவிஷன் போட்டியில், கோவை புளூ நைட்ஸ் அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.வி.சி.சி. அணியும் மோதின. புளூ நைட்ஸ் அணி 27.3 ஓவரில் 85 ரன் எடுத்து, ஆட்டம் இழந்தது. சஞ்சய் குமார் 4 விக்கெட், பிரபாகரன் 3 விக்கெட் வீழ்த்தினர். ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி 19 ஓவரில் ஐந்து விக்கெட் இழந்து, 86 ரன் எடுத்து வெற்றி வாகை சூடியது. நடராஜன் 31 ரன் எடுத்தார். சவுந்தரராஜன் 3 விக்கெட் வீழ்த்தினார்.