UPDATED : அக் 22, 2026 07:56 PM
ADDED : அக் 22, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
கோவை: தேனி மாவட்டம், போடியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 40. மார்த்தாண்டம், அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போ நடத்துனர். 20 ம் தேதி, நாகர்கோவில் – கோவை பஸ்சில் பணியில் இருந்தார்.
மறுநாள் காலை 7.30 மணிக்கு, காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் வந்தது. பயணிகள் இறக்கிய பின், நின்றிருந்த பஸ்ஸில் டிரைவர் அருண்குமார் சீட்டில் அமர்ந்தபடி துாங்கி கொண்டிருந்தார்.
நடத்துனர் தினேஷ்குமார், ரூ.12,480, டிக்கெட் எந்திரத்தை பணப்பையில் வைத்தார். பையை டிரைவர் சீட்டுக்கு அருகில் வைத்து விட்டு டிபன் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, பையை காணவில்லை. டிரைவர் அசந்து துாங்கி கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
