/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பொருள் தரம் அறிய பரிசோதனை மையம்
/
கட்டுமான பொருள் தரம் அறிய பரிசோதனை மையம்
ADDED : ஆக 27, 2025 10:39 PM
கோவை; கோவை மண்டல சோதனை கூடத்தில், கட்டுமானம் மற்றும் சாலை பணிகளுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யலாம்.
கலெக்டர் அறிக்கை:
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழில் வணிகத்துறையின் கீழ் மண்டல சோதனை ஆய்வு கூடம், கோவை விமான நிலையம் அருகே செயல்படுகிறது.
கட்டட கட்டுமானப் பொருட்கள், தார் கலவை, தண்ணீர், பிளீச்சிங் பவுடர், தோட்டக்கலைத்துறைக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஷீட், ரசாயன மாதிரிகளின் தரம் அறியலாம்.
கோவை மாநகராட்சி, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அரசுத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் கட்டுமான மற்றும் சாலைப்பணிகளுக்கு பயன்படுத்தும் மூலப்பொருட்களின் தரம் தெரிந்து கொள்ளலாம். விவரங்களுக்கு, 0422 - 2627065 அல்லது rtlkovai@gmail.com என்ற இ-மெயில் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.