தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீவிரவாத தடுப்பு அலுவலக கட்டுமான பணி 'விறுவிறு'

 தீவிரவாத தடுப்பு அலுவலக கட்டுமான பணி 'விறுவிறு'

 தீவிரவாத தடுப்பு அலுவலக கட்டுமான பணி 'விறுவிறு'


ADDED : மே 23, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 05:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.

கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின், பிரத்யேக தீவிரவாத தடுப்பு பிரிவு, 2024 ல் தமிழகத்தில் அமைக்கப்பட்டது. அதன் படி,கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பிரிவு தனித்து இயங்கி வருகிறது.

மண்டல அளவில் எட்டு மாவட்டங்களுக்குமான தலைமை அலுவலகம், கோவையில் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான கட்டுமான பணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்து வருகிறது. ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் ஒருங்கிணைந்த வளாகம் அமையவுள்ளது.

புதிய கட்டடத்தில் உளவு தகவல் சேகரிப்பு பிரிவு, கண்காணிப்பு மையம், ஆயுத பாதுகாப்பு வசதிகள் மற்றும் நவீன தகவல் பரிமாற்ற அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன.

பிற மாநில உளவுத்துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி., பத்ரிநாராயணன் கூறுகையில், “புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us