/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரப்பாலத்தில் கட்டுமானப்பணி போக்குவரத்தில் மாற்றம்
/
மரப்பாலத்தில் கட்டுமானப்பணி போக்குவரத்தில் மாற்றம்
மரப்பாலத்தில் கட்டுமானப்பணி போக்குவரத்தில் மாற்றம்
மரப்பாலத்தில் கட்டுமானப்பணி போக்குவரத்தில் மாற்றம்
ADDED : மே 15, 2025 11:50 PM
கோவை; மதுக்கரை, மரப்பாலத்தில் ரயில்வே கீழ்பாலத்தில் பணிகள் நடக்க உள்ளதால் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை - பாலக்காடு மற்றும் பாலக்காடு - கோவை செல்லும் கனரக, இலகுரக வாகனங்கள் மரப்பாலம் ரோடு வழியாக செல்ல இயலாது.
கோவை - பாலக்காடு மார்க்கம் இலகுரக வாகனங்கள் (ஒரு வழிப்பாதை) டவுன் பஸ் மற்றும் இலகுரக வாகனங்கள் மதுக்கரை சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி குவாரி ஆபீஸ் ரோடு, குரும்பபாளையம் ரோடு, மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
கனரக வாகனங்கள் (இருவழிப்பாதை)ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி குறிச்சி. ஈச்சனாரி ரோடு வழியாக சென்று சேலம் - கொச்சின் ரோட்டில் வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி வாகனங்கள் (இருவழிப்பாதை) ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் வலது புறம் திரும்பி குறிச்சி, கண்ணமநாயக்கனுர் ரோட்டில், இடது புறம் திரும்பி சேலம் - கொச்சின் ரோட்டில் சென்று வலது புறம் திரும்பி செல்ல வேண்டும். அரசு பஸ்கள் (இருவழிப்பாதை)ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் வலது புறம் திரும்பி, குறிச்சி கண்ணமநாயக்கனுர் ரோட்டில், வலதுபுறம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
பாலக்காட்டிலிருந்து கோவை மார்க்கம் இலகுரக வாகனங்கள் மட்டும் (ஒரு வழிப்பாதை)டவுன் பஸ் மற்றும் இலகுரக வாகனங்கள் செட்டிபாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி விறகுக்கடை பாலம் வழியாக சென்று ஏ.சி.சி., தொழிற்சாலை ரோடு வழியாக செல்லவேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.