/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட தொழிலாளர் சங்கம் தீர்மானம்
/
கட்டட தொழிலாளர் சங்கம் தீர்மானம்
ADDED : மார் 19, 2024 12:20 AM
கோவை;கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி., கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம், பாப்பநாயக்கன்பாளையம் சங்ஙக அலுவலகத்தில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில், தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்கள் முடக்கப்பட்டு, நான்கு பிரிவுகளாக புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டத்தால் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.
எனவே, நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், தொழிலாளர் விரோத கொள்கைகளை கொண்டுள்ள கட்சிகளை தோற்கடித்து, தொழிலாளர் நலனில் அக்கறை உள்ள கட்சிகளை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவெற்றப்பட்டன. மாநில செயலாளர் துரைசாமி, மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

