/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிப்காட்' தொழில்பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை
/
'சிப்காட்' தொழில்பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை
'சிப்காட்' தொழில்பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை
'சிப்காட்' தொழில்பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை
ADDED : ஜன 07, 2025 02:07 AM

நெகமம்; நெகமம், வடசித்தூரில் 'சிப்காட்' தொழில் பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சிறப்பு கூட்டம் நடத்தினர்.
நெகமம் அருகே உள்ள வடசித்தூர் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில், மெட்டுவாவி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், 'சிப்காட்' தொழில் பூங்கா அமைய இருப்பதை எதிர்த்து விவசாயிகள், ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், வடசித்தூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலாமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் தேவராஜ் மற்றும் துணைத் தலைவர் அப்துல் ஜாப்பர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பங்கேற்றவர்கள் பேசியதாவது:
வெட்டுவாவி பகுதியில் 'சிப்காட்' தொழில் பூங்கா அமைந்தால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் விவசாயிகள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இது மட்டும் இன்றி சுற்று வட்டாரத்தில், 10 முதல் 30 கி.மீ., வரை நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும்.
எனவே, இப்பகுதியில், 'சிப்காட்' தொழில்பூங்கா அமைப்பதை அரசு கைவிட வேண்டும். மேலும், அரசு சார்பில் 'சிப்காட்' தொழில்பூங்கா இங்கு வராது என சுற்றறிக்கை வரும்வரை இப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, பேசினர்.