/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகள் பிரச்னை 15 கிராமங்களில் ஆலோசனை கூட்டம்
/
வனவிலங்குகள் பிரச்னை 15 கிராமங்களில் ஆலோசனை கூட்டம்
வனவிலங்குகள் பிரச்னை 15 கிராமங்களில் ஆலோசனை கூட்டம்
வனவிலங்குகள் பிரச்னை 15 கிராமங்களில் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 28, 2024 12:20 AM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளால், விவசாய பயிர்கள் சேதம் அடைந்து வருகின்றன. மேலும் பல இடங்களில் வனவிலங்குகள் மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
இது மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிராமங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வன விலங்குகளிடமிருந்து விவசாயத்தையும், மக்களையும் காப்பாற்றும் இயக்கம், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்து, இன்று காரமடை மேற்கு பகுதிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த உள்ளது. காலை, 10:00 மணிக்கு மேல்பாவியில் ஆலோசனைக் கூட்டம் துவங்க உள்ளது.
அதை தொடர்ந்து நீலாம்பதி, தோலம்பாளையம், சீளியூர், தாயனூர், கணுவாய்பாளையம், மருதூர், புங்கம்பாளையம், திம்மம்பாளையம், ஏழுசுழி உள்பட, 15 கிராமங்களில் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இத்தகவலை தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் தெரிவித்தார்.