/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிந்தனை, செயலில் விழிப்புணர்வு மவுன பயிற்சி முகாம்
/
சிந்தனை, செயலில் விழிப்புணர்வு மவுன பயிற்சி முகாம்
சிந்தனை, செயலில் விழிப்புணர்வு மவுன பயிற்சி முகாம்
சிந்தனை, செயலில் விழிப்புணர்வு மவுன பயிற்சி முகாம்
ADDED : செப் 27, 2024 11:03 PM

சூலுார்: சிந்தனை, செயலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மவுன பயிற்சியில், ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஞான சஞ்சீவனம் குருகுலம் மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், ஞான விபாசனா எனும் மவுன பயிற்சி முகாம் முத்துக்கவுண்டன் புதுார் விவேகானந்தர் அரங்கில் நடந்தது. 90க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மெய்ஞான வாழ்வியல் வழிகாட்டி ஆசிரியர் சசிக்குமார் பயிற்சி அளித்து பேசுகையில், ''மனதில் அமைதி, மகிழ்ச்சி ஏற்பட மவுன பயிற்சி அவசியம். மனதை எப்போதும் உற்சாகமாக வைத்து கொள்ளவேண்டும். நமது சிந்தனை மற்றும் செயலில் இந்த பயிற்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,'' என்றார். இயக்க தலைவர் சம்பத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.