/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ளணும்! கண்காணிப்பு பொறியாளர் அறிவுரை
/
ரோந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ளணும்! கண்காணிப்பு பொறியாளர் அறிவுரை
ரோந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ளணும்! கண்காணிப்பு பொறியாளர் அறிவுரை
ரோந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ளணும்! கண்காணிப்பு பொறியாளர் அறிவுரை
ADDED : அக் 09, 2024 10:14 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை போன்று பெய்ததால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதை தொடர்ந்து, தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத்துவங்கியுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்துக்கு உட்பட்ட பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் கீழ், நீர் முறையாக செல்ல துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், இரும்பு தடுப்புகள், ஜே.சி.பி., இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் தயார் நிலையில் பொள்ளாச்சி அருகே பெரியாக்கவுண்டனுாரில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பருவமழையால் எதிர்பாராத பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் முறையாக ஈடுபட வேண்டும்.
ரோந்து பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மழை பாதிப்பு தகவல் வந்தால் உடனுக்குடன் சம்பவ இடத்துக்கு சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். மொபைல்போன் எந்நேரமும் உபயோகத்தில் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
ரோட்டோரங்களில் விழக்கூடிய நிலையில் மரக்கிளைகள் இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும். தலைமையிடத்தில் ஊழியர்கள் தயராக இருப்பதுடன், வெளியே செல்வதென்றால் முறையான தகவல்களை தெரிவித்துச் செல்ல வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளுக்கு கண்காணிப்பு பொறியாளர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், உட்கோட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.