தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அன்பையும் பக்தியையும் இடைவிடாமல் தொடருங்கள்

அன்பையும் பக்தியையும் இடைவிடாமல் தொடருங்கள்

அன்பையும் பக்தியையும் இடைவிடாமல் தொடருங்கள்


ADDED : அக் 22, 2026 07:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 07:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ‘‘அன்பையும் பக்தியையும் எந்த சூழலிலும் இடைவிடாமல் தொடருங்கள் பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் ஆசிர்வாதமும் அனுக்கிரஹமும் தடையின்றி உங்களை வந்து சேரும்,’’ என்று ஸ்ரீ சத்யசாய் சென்ட்ரல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் கூறினார்.

ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சத்யசாய் மந்திரில் இன்று (அக்.,22) நடந்த சாயி ‘சரணாகதி சங்கமம்’ நிகழ்ச்சியில் ரத்னாகர் பேசியதாவது:

இங்குள்ள சாய் பகவான் அனந்த சயனத்தில் ஆனந்தத்தோடு அபயஹஸ்தத்துடன் பிரசாந்தி நிலையத்திலுள்ள சுவாமியின் சயன அறையில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறார்.

இறைவனின் உண்மை நிலையே அழகு தான். அதனால் தான் கோயில்கள் அழகு பெருகின்றன. நேர்மறை சக்தி நிரம்பி உள்ளன. சுவாமி கோவைக்கு பலமுறை வந்திருக்கிறார் கோவையிலுள்ள பல இடங்களுக்கு சென்றிருக்கிறார்.

பிரசாந்தி நிலையத்துக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்களது பணி முழுமையாகவும் திருப்திகரமாகவும் மெச்சத்தகுந்த அளவில் இருக்கும். அதை போன்றே ரேஸ்கோர்ஸ் சத்யசாய் மந்திரின் புதுப்பிப்பு பணிகள் திருப்திகரமாக உள்ளது.

தடையின்றி கங்கை நதி ஓடுவது போல் சத்யசாய் சமிதியின் ஆன்மிகப்பணிகளும் சேவைகளும் தொடரும். தெய்வீகத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. காற்றை எப்படி பிடித்து வைக்க முடியாதோ அதுபோலத்தான். சுவாமியின் வலிமையையும் சக்தியையும் எப்போதும் அடைக்க முடியாது.

நல்ல சங்கல்பங்களை நிறைவேற்ற தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். பகவான் நம் பெற்றோரை போல. பெற்றோரிடம் நாம் உரிமையுடன் எப்படி கேட்டு வாங்குகிறோமோ அது போலத்தான் இறைவனிடம் நாம் வேண்டுதல்களை கேட்டு பெறலாம்.

மனதில் சினம், பொறமை போன்றவற்றை வெளியேற்ற நிதானத்தையும் நல்ல குணங்களையும் நிலை நிறுத்துவது அவசியம். இது போன்ற மனிதர்களை ஏற்றுக்கொள்ள பகவான் வாலன்டியராக காத்துக்கொண்டிருக்கிறார்.

அன்பெனும் பிடியில் ஆண்டவன் முழுமையாக அகப்படுவார். அதனால் அன்பை மட்டும் விடாமல் பிடித்திருங்கள் அன்பையும் பக்தியையும் எந்த சூழலிலும் இடைவிடாமல் தொடருங்கள். பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் அனுக்கிரஹம் தடையின்றி வந்து சேரும். இவ்வாறு ரத்னாகர் பேசினார்.

மாவட்ட தலைவர் வெங்கடேஷ் நாராயணன் வரவேற்றார். மாநில தலைவர் சுரேஷ் உரை நிகழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us