/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க தொடர் போராட்டம்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க தொடர் போராட்டம்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க தொடர் போராட்டம்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க தொடர் போராட்டம்
ADDED : டிச 03, 2024 06:23 AM

பொள்ளாச்சி ; கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில், பாமாயில் எண்ணெயை தடை செய்து விட்டு, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, 100 ரேஷன் கடைகளில், 100 நாட்கள் தொடர் போராட்டம் நடக்கிறது.
அதில், 46வது நாளாக, பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டி ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயி மூகாம்பிகா தலைமை வகித்தார். விவசாயிகள் கோபால்சாமி, கஞ்சம்பட்டி பாலச்சந்திரன், விவசாய சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பாமாயிலை இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து, 4,500 கோடி ரூபாய்க்கு மேல் மானியமாக கொடுத்து இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்யை, முழுமையாக கொள்முதல் செய்து மானிய விலையில் ரேஷன் கடை மற்றும் சத்துணவு திட்டத்துக்கு வினியோகிக்க வேண்டும்.
தமிழகத்தில், கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்ட நீதியரசர் சிவசுப்ரமணியம் தலைமையிலான குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.
வேளாண் பம்ப் செட்களுக்கு பத்தாண்டுகளாக நிலுவையில் இருக்கும் மும்முனை மின்சாரத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவையுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.