/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிமம் கடத்தலை கண்காணிக்க. கட்டுப்பாட்டு அறை ; கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
/
கனிமம் கடத்தலை கண்காணிக்க. கட்டுப்பாட்டு அறை ; கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
கனிமம் கடத்தலை கண்காணிக்க. கட்டுப்பாட்டு அறை ; கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
கனிமம் கடத்தலை கண்காணிக்க. கட்டுப்பாட்டு அறை ; கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
ADDED : பிப் 04, 2026 05:08 AM

கோவை : மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை கொண்டு செல்வதை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
கனிமங்களை வெட்டி எடுப்பது மற்றும் கடத்தல்தொடர்பான புகார்களை பதிவு செய்ய, 'KOVAI MINING SURVEILLANCE' என்ற மொபைல் செயலியும், இணையதளமும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
கனிம கடத்தலை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்க முக்கிய இடங்களில் 132 ஏஐ கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களின் உரிமத் தகடுகளை தானியங்கி முறையில் படம் பிடிக்கும் 'ஆட்டோமேஷன் நம்பர் பிளேட் ரெககனிஷன்' கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன. இவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பவன்குமார் திறந்து வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இதுபோன்ற கண்காணிப்பு அறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 170 குவாரிகளில், ஒரு சில குவாரிகளில் மட்டுமே, புவியியல் தகவல் அடிப்படையிலான எல்லை சர்வே (டிஜிபிஎஸ்) முறையாக நடத்தப்பட்டிருப்பதாகவும், பெரும்பாலான குவாரிகளில் முறையான ஆய்வு இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'டிஜிபிஎஸ் சர்வே என்பது ஒரு கட்டாய விதிமுறை. புகார்கள் எழும் குவாரிகளில் கூடுதலாக ட்ரோன் மூலமாகவும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
பழைய குவாரிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு, அந்த இடைப்பட்ட காலத்திற்குள் சர்வே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. புதிதாக தொடங்கப்படும் குவாரிகளுக்கு, இந்த டிஜிபிஎஸ் சர்வே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
'கடந்த மாதத்தில் குவாரி தொடங்க அனுமதி கோரி, ஆறு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
'இந்த விண்ணப்பங்கள் மீது, டிஜிபிஎஸ் சர்வே உள்ளிட்ட அனைத்து ஆய்வுகளும் முடிந்த பின்னரே அவை இயங்க அனுமதிக்கப்படும்' என்றனர்.

