ADDED : பிப் 04, 2026 05:09 AM

அ நிறம் | அளவு
கோவை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 57ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை மாநகர் மாவட்ட தி.மு. க. சார்பில் மவுன ஊர்வலம் நேற்று நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார்.
காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் இருந்து அண்ணாதுரை சிலை வரை ஊர்வலம் நடந்தது. அவரது சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி, மாநில தீர்மானக்குழு செயலாளர் கார்த்திக், மாநில மா ணவரணி செயலாளர் ராஜிவ்காந்தி, மேயர் ரங்கநாயகி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பின், வடகோவையில் உள்ள மாவட்ட தி. மு.க. அலுவலகத்தில், அண்ணாதுரை உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
