/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க ஆய்வு ஓட்டுநர்கள் ஒத்துழைத்தால் பலன்
/
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க ஆய்வு ஓட்டுநர்கள் ஒத்துழைத்தால் பலன்
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க ஆய்வு ஓட்டுநர்கள் ஒத்துழைத்தால் பலன்
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க ஆய்வு ஓட்டுநர்கள் ஒத்துழைத்தால் பலன்
ADDED : ஆக 19, 2025 09:24 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
கேரளா மாநிலம் செல்லவும், கோவைக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் பொள்ளாச்சி நகரம் அமைந்துள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது.அதில், பொள்ளாச்சி - உடுமலை ரோடு மிகவும் உருக்குலைந்துள்ளதால், விபத்துகள் ஏற்படுத்துகிறது.
மேலும், பயன்படுத்தப்படாத வாகனங்களை நிறுத்துமிடமாக சர்வீஸ் ரோடு மாறியுள்ளது. இதனால், இந்த ரோட்டில் விபத்துகள் நடக்காத நாளில்லை என்பது போல மாறியது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன், சிறப்பு எஸ்.ஐ., தங்கதுரை, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் மின்நகர் அருகே நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ரோட்டின் தரம், விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள், விபத்துகளை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்துதல், வேகத்தை குறைத்து மெதுவாக செல்ல அறிவிப்பு பலகை வைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், விபத்துகள் அதிகளவு நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்யப்படுகிறது. ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக வேகத்தடை அமைப்பது, ரோட்டில் மஞ்சள் பட்டை கோடுகள், மெதுவாக செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் 'ஸ்லோ' என எழுதப்பட்டது.
தற்போது, விபத்துகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வுப்பணிகள், ஆச்சிப்பட்டி வரை மேற்கொள்ளப்படும். விபத்துகள் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சாலை பாதுகாப்பு விதிகளை வாகன ஓட்டுநர்களும் கடைப்பிடித்தால் விபத்துகளை தடுக்க முடியும். வாகனங்களை மிதவேகத்தில் இயக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.