/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவி; 63 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம்
/
மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவி; 63 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம்
மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவி; 63 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம்
மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவி; 63 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம்
ADDED : ஜூலை 17, 2025 10:29 PM
கோவை; கோவை மாநகராட்சியில், 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில், 55 பேர் பெண்கள். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், நியமன கவுன்சிலராக, ஒரு மாற்றுத்திறனாளியை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
மாநகராட்சி கமிஷனரிடமோ அல்லது தபால் மூலமாகவோ நேற்று பிற்பகல், 3:00 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 16 பெண்கள், 47 ஆண்கள் என மொத்தம், 63 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இனி, கலெக்டர் தலைமையிலான குழு, விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான ஒரு மாற்றுத்திறனாளியை தேர்ந்தெடுத்து, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும். அதன்பின், நகராட்சி நிர்வாகத்துறையில் இருந்து நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்ததும், மாநகராட்சியில் பதவியேற்பார்.