/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
/
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
ADDED : ஜன 09, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடக்கவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம், நிர்வாக காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். மேயர் கல்பனா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் குடிநீர், ரோடு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் சார்ந்த தேவைகள், பிரச்னைகள் சார்ந்த மனுக்களை பொது மக்கள் அளிக்கின்றனர். இந்நிலையில், நிர்வாக காரணத்தால் இன்று நடக்கவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம், ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.