/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி திருமண மண்டபம் புதுப்பிப்பு
/
மாநகராட்சி திருமண மண்டபம் புதுப்பிப்பு
ADDED : பிப் 22, 2026 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ராமநாதபுரம் நாகப்பர் தேவர் வீதியில் ரூ.1.01 கோடியில் மாநகராட்சி திருமண மண்டபம் புதுப்பிக்கப்பட்டது.
கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறை, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 வகுப்பறை கட்டப்பட்டது.
இவற்றை எம்.பி. ராஜ்குமார் நேற்று திறந்து வைத்தார். பின், ஆசிரியர் காலனியில் வார்டு அலுவலகத்தை திறந்ததோடு, புதிதாக நுாலகம் கட்டும் பணியை துவக்கினார்.
மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், நிலைக்குழு தலைவர்கள் மண்டல தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

