தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/செலவை சிக்கனப்படுத்தும் கட்டுமான முறை; ‘மாத்தி யோசிக்க’ பொறியாளர் ஆலோசனை

செலவை சிக்கனப்படுத்தும் கட்டுமான முறை; ‘மாத்தி யோசிக்க’ பொறியாளர் ஆலோசனை

செலவை சிக்கனப்படுத்தும் கட்டுமான முறை; ‘மாத்தி யோசிக்க’ பொறியாளர் ஆலோசனை


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டிலேயே அதிக செலவு செய்ய வேண்டிய அறை கழிவறைதான். குழாய், பிட்டிங்ஸ் என இன்றைய தேதிக்கு விலை அதிகரித்துவிட்டது. தவிர, சுவரின் நான்கு புறமும் ‘டைல்ஸ்’ பதிக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் பட்டால் சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கும்.

இக்கட்டுமானத்தில் தேவையானதும், தவிர்க்க வேண்டியதும் கணக்கிட்டாலே செலவுகளை ஓரளவு குறைக்க முடியும் என்கிறார், கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்க(கொசினா) உறுப்பினர் மாரிமுத்துராஜ்.

‘‘அறையின் இடத்தை அதாவது 10x12 அடியில் 20 சதுரடி இடத்தை பிடித்துக்கொள்ளும் செலவு தொகை சதுர அடிக்கு ஏற்ப மாறுபடும். கான்கிரீட் பரண் போடாமல், மர வேலையில் போர்டு அடித்தால் செலவு அதிகம். கான்கிரீட் பரண் வலுவானது; நீடித்து உழைக்க கூடியது. மர அலமாரி ஆயுள் 10, 15 ஆண்டுகள்தான்.

சில பகுதிகளில் தரை தளத்தில் கரையான் அரித்து மர அலமாரியை முழுவதுமாக மாற்றக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆனால் பார்க்க பொலிவாக இருக்க வேண்டுமே என நினைத்தால், ஆர்.சி.சி. பரணுக்கு பதிலாக கடப்பா கல் வைத்த அலமாரி அமைத்தால் பல வருடங்கள் நீடித்து நிற்கும்.

ஆனால், நுகர்வோர் மர அலமாரியைத்தான் விரும்புகிறார்கள். அது செலவை அதிகரிக்கும்.

அறையின் அளவு பெரியதாக இருந்தால் மரத்தில் கப்போர்டு, வார்ட்ரோப் செய்தால் நன்றாக இருக்கும். 12x16 அடி உள்ள அறைக்கு அது பொருத்தமானது.

10x10 அடி மற்றும் 10x12 அடி என்ற அளவில் அறைகள் சிறியதாக தோற்றமளிக்கும். இங்கே மர அலமாரிகளை தனியாக திணித்தால், பயன்படுத்தக்கூடிய பகுதி குறைந்து போகும் என்கிறார் பொறியாளர் மாரிமுத்துராஜ்.

எலக்ட்ரிக் பிட்டிங்


வீட்டு உரிமையாளர், வாங்குபவர்கள்தான் எலக்ட்ரிக் பிட்டிங் போட வேண்டும். குழல் விளக்கு அல்லது குண்டு பல்பு, மின்விசிறி போட்டால் முற்காலத்தில் வீடு முடிவடைந்த நிலையில் குடியேற போதும். ஆனால் தற்போது சாண்டிலிவர் உள்ளிட்ட ஏராளமான விளக்குகள் தேவை. இதற்கு வழக்கமான எலக்ட்ரீஷியன் அல்ல; இதற்கென உள்ள எலக்ட்ரீஷியன் தேவை. இதனால் செலவு அதிகரிக்கும் என்றார் பொறியாளர் மாரிமுத்துராஜ்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us