/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் பார்க்கிங் கட்டண பிரச்னை: இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
/
கார் பார்க்கிங் கட்டண பிரச்னை: இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
கார் பார்க்கிங் கட்டண பிரச்னை: இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
கார் பார்க்கிங் கட்டண பிரச்னை: இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : அக் 30, 2025 12:22 AM
கோவை: கோவை, திருச்சி ரோட்டை சேர்ந்தவர் கவுரி. வக்கீலான இவர், 2025, பிப். 17ல், ஆர்ட்ஸ் காலேஜ் ரோட்டிலுள்ள பழமுதிர் நிலையத்துக்கு ஜூஸ் குடிக்க நண்பர்களுடன் சென்றார். காரை பழமுதிர் நிலையத்தின் கார் பார்க்கிங்கில் நிறுத்தினார். ஜூஸ் குடித்த பின், 240 ரூபாய்க்கான பில் காண்பித்து காரை எடுக்க, பில்லில் சீல் வைத்து தரும்படி கேட்டார். ஆனால், 500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் மட்டுமே, கார் பார்க்கிங் டோக்கனில் சீல் வைத்து தர முடியும் என அந்நிறுவன ஊழியர் தெரிவித்தார்.
கார் பார்க்கிங் கட்டணம் தனியாக தருவதாக கூறியும் ஏற்றுக்கொள்ளவில்லை. தனியாக பார்க்கிங் கட்டணம் கிடையாது; 500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் மட்டுமே காரை நிறுத்த முடியும் என்று கூறினர். அதனால், 538 ரூபாய்க்கான பொருட்கள் வாங்கி, அதற்கான பில்லை காட்டிய பிறகே காரை எடுக்க அனுமதித்தனர். மன உளைச்சல் அடைந்த கவுரி, பழமுதிர் நிலையத்தினர் இழப்பீடு வழங்கக்கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்கு, எதிர்மனுதாரர், 30,000 ரூபாய் இழப்பீடு மற்றும் வழக்கு செலவு 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

