/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் கலை கல்லுாரியில் துளிர் கண்காட்சி, வினாடி - வினா
/
இந்துஸ்தான் கலை கல்லுாரியில் துளிர் கண்காட்சி, வினாடி - வினா
இந்துஸ்தான் கலை கல்லுாரியில் துளிர் கண்காட்சி, வினாடி - வினா
இந்துஸ்தான் கலை கல்லுாரியில் துளிர் கண்காட்சி, வினாடி - வினா
ADDED : அக் 30, 2025 12:25 AM

கோவை:  கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், துளிர் கண்காட்சி மற்றும் வினாடி-வினா போட்டி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மாவட்ட பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 284 அணிகள் அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சியிலும், 78 அணிகள் தமிழ் வினாடி-வினா போட்டியிலும், 270 அணிகள் ஆங்கில வினாடி வினா போட்டியிலும் பங்கேற்றன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான பல படைப்புகளை மாணவர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
இந்துஸ்தான் கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் துவக்கி வைத்து பேசுகையில், ''இளமை, புத்திசாலித்தனம் மற்றும் எல்லையற்ற புதுமையின் பிரகாசமான கொண்டாட்டமாக இந்நிகழ்வு உள்ளது. நிலையான எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் மாணவர்களின் படைப்புகள் மன தைத் துாண்டுவதாக அமைந்துள்ளன,'' என்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் ரமணி பேசுகையில், ''தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் அறிவியல் திறமைகளை வளர்ப்பதற்கான இந்த ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டுக்குரியது,'' என்றார்.
நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

