/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆச்சான் குளக்கரையில் வெடிப்புகள் சீரமைக்கும் பணி
/
ஆச்சான் குளக்கரையில் வெடிப்புகள் சீரமைக்கும் பணி
ADDED : மார் 20, 2025 11:44 PM

சூலுார்: ஆச்சான் குளக்கரையில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலம்பூரில், 400 ஏக்கர் பரப்புள்ள ஆச்சான் குளம் உள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் இக்குளத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. சுற்றுவட்டார விவசாயத்துக்கு நீர் ஆதாரமாக இக்குளம் உள்ளது. இக்குளக்கரையில், பல இடங்களில் வெடிப்புகளும், மண் அரிப்பும் ஏற்பட்டு இருந்தது. இதனால், விவசாயிகள் அச்சமடைந்தனர். குளக்கரையை பலப்படுத்த கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஆச்சான்குளம் பாதுகாப்பு சங்கத்தினர், குளக்கரையை பலப்படுத்தும் பணியை துவக்கி உள்ளனர். மண் அரிப்பு மற்றும் வெடிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து மண் அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக ஆச்சான்குள பாதுகாப்பு சங்கத்தினர் கூறினர்.