/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குனியமுத்துார் அரசு பணியாளர் காலனி சாலையில் விரிசல், பள்ளம்
/
குனியமுத்துார் அரசு பணியாளர் காலனி சாலையில் விரிசல், பள்ளம்
குனியமுத்துார் அரசு பணியாளர் காலனி சாலையில் விரிசல், பள்ளம்
குனியமுத்துார் அரசு பணியாளர் காலனி சாலையில் விரிசல், பள்ளம்
ADDED : பிப் 11, 2025 11:59 PM
கோவை; குனியமுத்துார் அரசு பணியாளர் காலனியில், சமீபத்தில் போடப்பட்ட தார் ரோட்டில், 16 இடங்களில் விரிசல் இருப்பது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்ததில், கண்டறியப்பட்டது.
கோவை மாநகராட்சி, 88வது வார்டு, குனியமுத்துாரில் ஜெ.ஜெ., நகர் செல்லும் ரோட்டில், சுண்டக்காமுத்துார் ரோட்டை இணைக்கும் அரசு பணியாளர் காலனியில், 'டூரிப்' திட்டத்தில், ரூ.16.84 லட்சத்தில் மறுதார் தளம் அமைக்கப்பட்டது.
எம்.எஸ்., இன்ஜினியர்ஸ் என்கிற நிறுவனம், இப்பணியை மேற்கொண்டது. புதிதாக தார் ரோடு போடப்பட்டு, முழுசாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் ஆங்காங்கே விரிசல், பள்ளம் ஏற்பட்டிருந்தது.
பாதாள சாக்கடை குழாய் மேனுவல் அமைத்திருந்த இடத்தில், பள்ளம் பெரிதாக இருந்தது. லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது, ரோடு கீழிறங்குகிறது. இதுதொடர்பாக, பிப்., 6ல் நமது நாளிதழில், படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவ்விடத்தை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேரில் ஆய்வு செய்தார். மொத்தம், 16 இடங்களில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டது. எல் அண்டு டி நிறுவனத்தினரால், பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டிருக்கிறது.
விரிசல் ஏற்பட்டுள்ள பகுதிகளை தோண்டி சமப்படுத்தி விட்டு, சிறிது நாள் கழித்து, தரமாக தார் ரோடு போட, கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

