/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராப்ட் பஜார் கண்காட்சி கோவையில் துவக்கம்
/
கிராப்ட் பஜார் கண்காட்சி கோவையில் துவக்கம்
ADDED : ஜூலை 18, 2025 09:53 PM

கோவை; கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில், 'கிராப்ட் பஜார் 2025' பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, கோவை அவிநாசி சாலையில் உள்ள, சுகுணாதிருமண மண்டபத்தில் துவங்கியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் கலந்துகொள்ளும் இக்கண்காட்சியில், கலை, கைவினை மற்றும் ஜவுளி வகை பொருள்கள் ஒரே கூரையின் கீழ் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நேரடியாக கைவினை கலைஞர்களிடமிருந்து வாங்கும் வாய்ப்பு இங்கு கிடைக்கிறது.
மண்பாண்டங்கள், மர வேலைப்பாடுகள், பித்தளைப் பொருட்கள், அரக்கு வளையல்கள், நாணல் கூடைகள், கண்ணாடி வளையல்கள், மூங்கில் மற்றும் கரும்பு கைவினைகள், டெரகோட்டா சிற்பங்கள், தெய்யம் முகமூடிகள் உள்ளிட்ட கலை மற்றும் கைவினைப் பொருட்கள், கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
கோண்ட், மிதிலா, மைசூர், செரியல், பிச்வாய், ராஜஸ்தான் மினியேச்சர், வார்லி, குருவாயூர் சுவரோவியம் உள்ளிட்ட பாரம்பரிய ஓவிய வகைகள் காட்சிப்படுத்தப்படு கின்றன
வரும் 22 வரை நடைபெறும் கண்காட்சியை காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

