/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்'
/
'படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்'
'படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்'
'படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்'
ADDED : செப் 29, 2025 12:43 AM

கோவை; விஜயா வாசகர் வட்டம் மற்றும் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில், 'கி.ரா விருது -2025' வழங்கும் விழா, நேற்று பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லுாரியில் நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தலைமைவகித்து, எழுத்தாளர் வேணுகோபாலுக்கு விருது மற்றும் ரொக்கப்பரிசு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்தார்.
இதில், அவர் பேசியதாவது:
வாழக்கூடிய காலத்திலே எழுத்தாளனை கவனிக்காத சமூகம், சமூகமாக இருக்க முடியாது. படைப்பாளிகளுக்கு இதுபோன்ற விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டியது அவசியம். உலகின்
ஒவ்வொரு காலகட்டங்களிலும், மனிதர்களின் வாழ்வியல், வாழ்வியல் முறைகளால் ஏற்படும், தாக்கம், சமூக சூழல் அனைத்தும் படைப்புகள் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது.
நாம் தேடித்தேடி படிக்கும் புத்தகங்கள் தரும் அனுபவமே வேறு. புத்தங்களை எடுத்து பார்த்து வாசித்து உணர வேண்டும்.
விவசாயம், நிலம், மக்கள் என, நாம் வாழ்ந்து பார்த்த அனுபவங்களை படைப்புகளாக மாற்றி காட்டியுள்ளார் எழுத்தாளர் வேணுகோபால்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்நிகழ்வில், நடிகர் சிவக்குமார், விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம், சக்தி மசாலா நிறுவன நிர்வாகிகள் துரைசாமி மற்றும் சாந்தி, எழுத்தாளர் பாவண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.