/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிரெடாய்' நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
/
'கிரெடாய்' நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
ADDED : ஜூலை 09, 2025 10:46 PM

கோவை; கிரெடாய் அமைப்பின் கோவை நிர்வாகிகள், தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து, கோவை மாஸ்டர் பிளான் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை வெளியிட்டதற்கு, நன்றி தெரிவித்தனர்.
கிரெடாய் கோவை தலைவர் அரவிந்த் குமார், துணைத் தலைவர் ராஜீவ் ராமசாமி, பொருளாளர் கார்த்திக் குமார், உறுப்பினர் சந்திரமவுலி, தமிழ்நாட்டின் கிரெடாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குகன் இளங்கோ, பொது மேலாளர் பாலச்சந்திரன் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கிரெடாய் கோவை தலைவர் அரவிந்த் குமார் கூறுகையில், ''கோவை மாஸ்டர் பிளான் 2041, எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நுணுக்கமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் அடுத்த 16 ஆண்டுகளில், ரூ. 25,000 கோடி அளவிற்கு முதலீடுகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தின் வாயிலாக, ரூ.35,000 கோடி முதலீடு செய்யப்படும். இதனால் கோவைப் பகுதி பெரும் வளர்ச்சியைக் காண உள்ளது,''என்றார்.