/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும்: பொள்ளாச்சி டி.எஸ்.பி., உறுதி
/
குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும்: பொள்ளாச்சி டி.எஸ்.பி., உறுதி
குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும்: பொள்ளாச்சி டி.எஸ்.பி., உறுதி
குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும்: பொள்ளாச்சி டி.எஸ்.பி., உறுதி
ADDED : ஜன 19, 2024 11:48 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி சரகத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற சம்பவங்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என, டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் பணியாற்றிய கூடுதல் எஸ்.பி., பிருந்தா, சேலம் மாநகர துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு மாற்றாக துாத்துக்குடி விளாத்திக்குளம் டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியில் நேற்று பொறுப்பேற்ற டி.எஸ்.பி.,க்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். டி.எஸ்.பி., கூறுகையில், ''பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்றார்.