ADDED : அக் 22, 2026 10:10 PM
வழிப்பறி செய்த 2 பேர் கைது
வெரைட்டி ஹால் ரோடு, டாஸ்மாக் அருகில், திருச்சி ரோடு, ஹைவேஸ் காலனி தனுஷ்,26, மேற்கு வங்கம், சில்லிக்குவடி அஜய்,35, ஆகியோர், அவ்வழியாக செல்லும் நபர்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். சதீஷ்குமார் என்பவர் தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
63 கிலோ புகையிலை பறிமுதல்
காட்டூர் போலீசார், அவினாசி ரோடு மேம்பாலம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். ஆர்.எஸ்.புரம், வி.சி.வி. ரோடு லாலுபிரசாத், 32, என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பைக்கில் கடத்தி சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 63 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
லாட்டரி விற்றவர் கைது
கரும்புக்கடை போலீசார், ரோந்து பணியின் போது, அங்குள்ள பேக்கரி அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற மதினா நகர் அன்சாரி, 50, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கேரள மாநில 60 லாட்டரி சீட்டுக்கள், மொபைல் போனை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆஷாத் நகரில் லாட்டரி சீட்டு விற்ற பள்ளி வீதி உம்மர் பாருக், 50, கைது செய்யப்பட்டார்.
