ADDED : அக் 26, 2026 10:00 PM
கடனை கேட்டவருக்கு மிரட்டல்
கோட்டை மேடு,எல்.என். வீதியை சேர்ந்தவர் அப்துல்காதர். பச்சாபாளயைத்தை சேர்ந்த அகில்சந்த் என்பவர், அப்துல்காதரிடம், 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். மாதம்,ரூ.50,000 ம் ஆக திருப்பி தருவதாக உறுதி அளித்தார். நான்கு மாதங்கள் பணம் செலுத்தினார். அதன் பின் பணம் கொடுக்கவில்லை. கேட்ட போது, அப்துல்காதரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், உக்கடம் போலீசார் அகில்சந்த் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
…………
பஸ்சில் சிக்கி பெண் பலி
பி.என்.புதுார், பொம்மிநாயக்கர் வீதியை சேர்ந்தவர் அஷ்வின்,21. உறவினரான , அதே பகுதியிலுள்ள காளியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தாரா,58,வை ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் சென்ற போது, சறுக்கி ரோட்டில் விழுந்தனர். அவ்வழியாக வந்த தனியார் பஸ், தாரா மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த தாரா சம்பவ இடத்தில் பலியானார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அஷ்வின், தனியார் பஸ் டிரைவர் நரேந்திரன்,27, மீது வழக்கு பதிவு செய்தனர்.
மது விற்றவர்கள் கைது
ஆர்.எஸ்.புரம் போலீசார், தடாகம் ரோட்டில் ரோந்தில் ஈடுபட்ட போது. வடவள்ளி, வீரகேரளத்தை சேர்ந்த ஆனந்த் ராஜ்,35, டாஸ்மாக்கில் மது வாங்கி, பிளாக்கில் அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மது விலக்கு பிரிவு போலீசார், கணபதி, பொன்னையன் வீதியில் ரோந்து சென்றபோது அதிக விலைக்கு மது விற்ற அதே பகுதியை சேர்ந்த சக்திவேல்,55, என்பவரை கைது செய்தனர், 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
