ADDED : நவ 01, 2026 02:58 PM
கோயில் உண்டியலில் திருட்டுநெல்லை ஆசாமி பிடிபட்டார்
டவுன்ஹால் : மணிமேகலை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. வீட்டருகே நடந்து சென்ற போது அங்குள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் உண்டியல் பணத்தை ஒருவர் திருடுவதை பார்த்தார். சத்தம் போட்டு ஆட்களை திரட்டினார். திருடனை பிடித்து உக்கடம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த கவுதம், 32 என தெரிந்தது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். உண்டியல் பணம் ரூ.1,600 மீட்கப்பட்டது.
2 இடங்களில் பள்ளி சிறுமிகளிடம்
டிரைவர்கள் பாலியல் தொல்லை
போத்தனூர்: கோவைபுதூரை சேர்ந்த ஒருவரின் 11 வயது மகள், தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கு காரில் சென்று வருகிறார். வெள்ளி மாலை வீடு வந்த சிறுமி, கார் டிரைவர் தன்னிடம் அத்துமீறி நடந்ததுடன், தனியே வெளியே செல்ல அழைத்ததாகவும் அம்மாவிடம் கூறி அழுதுள்ளார்.
போத்தனூர் மகளிர் போலீஸ் விசாரித்து, டிரைவர் ரவிச்சந்திரன், 54 என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதே போல், பேரூரை சேர்ந்த, 14 வயது சிறுமி, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி. வெள்ளியன்று வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி மொபைல்போன் மூலம், வீடியோ எடுத்துள்ளார். மாணவி கூச்சல் போட்டதும், ஆசாமி ஓடி சென்று ஆட்டோவை ஸ்டார்ட் செய்து தப்பினார்.
சிறுமியின் தாய் போத்தனூர் போலீசில் புகார் கொடுத்தார். ஆட்டோ டிரைவரை தேடுகின்றனர்.
வீட்டு பூட்டை உடைத்து
நகைகள், பணம் கொள்ளை
பீளமேடு: செங்காளியப்பன் நகரை சேர்ந்தவர் ஷர்மிளா. சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வேலுார் சென்றார். பணிப்பெண் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக ஷர்மிளாவிடம் கூறினார். ஷர்மிளா பார்த்த போது, 4 தங்க கம்மல்கள், யானை முடி மோதிரம், வெள்ளிப்பொருட்கள், ரூ.20,000 ரொக்கம் கொள்ளை போயிருந்தன. பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா கடத்தி விற்றதாகபீஹாரிகள் இருவர் கைது
பி.என்.புதுார்: சாய்பாபா காலனி போலீஸ் ரோந்து பணியின் போது பி.என்.புதுார் காலி மைதானம் அருகே நின்ற இருவரிடம் சோதனை நடத்தினர். அதில் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் பீஹார் மாநிலத்தை சேர்ந்த நசீம் மன்சூரி, 31, செல்வபுரத்தை சேர்ந்த பாரத், 25 எனதெரிந்தது. விற்பனைக்காக கஞ்சா கடத்திய அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குனியமுத்துார் : விற்பனைக்காக கஞ்சா கடத்திய பீஹார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ராஜூராம், 28, ஈரோடு வெள்ளோட்டை சேர்ந்த பிரக்யா பரம்பிதா பாரிக், 31, லாலி ரோடு லவகுஷ் பதக், 26 ஆகிய மூவரை குனியமுத்துார் போலீசார் சிறையில் அடைத்தனர். 1.5 கிலோ கஞ்சா, ரூ.25,400 பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருள் விற்பனை
பல இடங்களில் 23 பேர் கைது
காட்டூர்: புகையிலை பொருள் விற்பது குறித்து பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, கவுண்டம்பாளையம், செல்வபுரம், போத்தனுார், குனியமுத்துார், சுந்தராபுரம், கரும்புகடை, சிங்காநல்லுார், பீளமேடு, சரவணம்பட்டி போலீசார் சோதனை நடத்தினர். இதில் 21 பேர் கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்டனர். இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். 50 கிலோவுக்கும் அதிகமான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
