தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


ADDED : நவ 07, 2026 03:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 03:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இடையூறு செய்த நால்வர் கைது

சேலம் வெங்கடேஷ்,52 கோவை டவுன்ஹால் தீபன்பாபு,34, ஆகியோர், ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட்டிலுள்ள ஒரு பூக்கடையில் பணிபுரிகின்றனர். பூ மார்க்கெட், நன்னெறி கழக வீதியை சேர்ந்த ஜெயந்தி,59, விமல்ராஜ்,40, ஆகியோர் அதே பகுதியிலுள்ள மற்றொரு பூக்கடையில் பணிபுரிகின்றனர். பூக்கடை முன் குப்பை கொட்டியதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பொது இடத்தில் சண்டை போட்டனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் நான்கு பேரும் கைது செய்து, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

எஸ்.ஐ.,யிடம் தகராறு வழக்குபதிவு

சிங்காநல்லுார் எஸ்.ஐ., தினேஷ்பாபு, காமராஜர் ரோட்டில் , டெய்லர் கடை முன் பொது மக்களுக்கு இடையூறாக நிறுத்தியிருந்த வாகனத்தை அப்புறப்படுத்த சென்றார். கடை உரிமையாளர் தங்கவேல் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். புகாரின் பேரில், தங்கவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புகையிலை பொருள் விற்றவர் கைது

காந்திபுரம், 4 வது வீதியில் டாஸ்மாக் அருகில் பெட்டி கடையில் ரத்தினபுரி போலீசார் சோதனையிட்டனர். தடை செய்த புகையிலை விற்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக, அறந்தாங்கியை சேர்ந்த சல்மான்கான், 22,கைது செய்யப்பட்டார். மூன்றரை கிலோ புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.சிங்காநல்லுார் காமராஜர் ரோட்டிலுள்ள பெட்டி கடையில் போலீசார் சோதனை நடத்தினர். தடை செய்த புகையிலை பொருள் விற்ற காரைக்குடி ராஜபாண்டி,21, கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து , 3 கிலோ புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

…………………..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us