தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


ADDED : நவ 10, 2026 07:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 07:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மகனுக்கு கத்திக்குத்து

தந்தை சிறையில் அடைப்பு

குனியமுத்துார் : குளத்துப்பாளையம் தோட்டம் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் கணேசன்; டிரைவர். மனைவி சாந்தி. மூத்த மகன் கவுதம் கல்லூரி மாணவர். தீபாவளியன்று மதியம் கணேசன் மது குடித்ததை மகன் கவுதம் கண்டித்தார். வாக்குவாதம் ஏற்பட்டது. கணேசன், கவுதமை கத்தியால் குத்தியதில் மார்பு, தலையில் காயம் ஏற்பட்டது. கவுதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், கணேசனை குனியமுத்துார் போலீசார் சிறையில் அடைத்தனர்.

பொது இடங்களில் மது

குடித்ததாக 66 பேர் கைது

கோவை : பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பல்வேறு பிரச்னைகள் எழுவதாக தொடர் புகார்கள் வந்தன. போலீசார் கண்காணித்து நேற்று ஒரே நாளில், மாநகர எல்லைக்குட்பட்ட 18 போலீஸ் ஸ்டேஷன்களில், 59 வழக்குகள் பதியப்பட்டன. 66 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

* துடியலுார் போலீசார் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற சிவகங்கை, இளையான்குடியை சேர்ந்த பாரதிதாசன், 45 என்பவரை சிறையில் அடைத்தனர். 20 மதுபாட்டில்கள், ரூ.5500 பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us