தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


ADDED : நவ 14, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வீட்டு கதவை உடைத்து திருட்டு

கணபதி : லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ரத்னா, 42. நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ஒரு பவுன் நகைகள் திருடப்பட்டன. புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் விசாரிக்கின்றனர்.

காப்பர் கம்பி திருட்டு

சிங்காநல்லுார் : கடந்த சில தினங்களாக சிங்காநல்லுாரிலுள்ள விவசாய தோட்டங்களில் உள்ள மோட்டார் பம்ப்கள், அதில் இணைத்துள்ள தாமிர கம்பிகள் திருடு போயின. 13 தோட்டங்களில் மொத்தம், ரூ.3.35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தன. 14 விவசாயிகள் சிங்காநல்லுார் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.இதேபோல், வெள்ளலுார் பஞ்சாயத்து அலுவலகத்தில் 1,600 கிலோ தாமிர கம்பி திருடிய அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், 23 என்பவரை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இருவரை தேடுகின்றனர்.==

கஞ்சா விற்ற 4 பேர் கைதுகுனியமுத்துார் : போலீசார் நேற்று ரோந்து சென்ற போது மாநகராட்சி கழிப்பிடம் அருகே நின்றிருந்த வாலிபரிடம் சோதனை நடத்தினர். அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. விசாரணையில் அவர் குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த முகமதுஆசிப்பை, 20 கைது செய்தனர்.

கரும்புக்கடை : ஆசாத் நகரில் உள்ள காலி மைதானத்தில் நின்றிருந்த வாலிபரிடம் நடத்திய சோதனையில், அவர் கஞ்சா விற்றது தெரிந்தது. போலீசார் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த பிபின், 36 என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3,100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

சரவணம்பட்டி: லட்சுமி நகரில் கஞ்சா விற்ற ஒடிசாவை சேர்ந்த பிக்ரம் மாலிக், 36 என்பவரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1,400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கீரணத்தம் ரோட்டில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த மணிகண்டனை, 29 சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us