தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


ADDED : நவ 17, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்டறையில் வெள்ளி திருட்டு

செல்வபுரம் : சண்முகராஜபுரத்தை சேர்ந்தவர் சபாபதி, 65. வீட்டின் முதல் மாடியில் தங்க நகைப்பட்டறை நடத்தி வருகிறார். 11ம் தேதி பட்டறையை மூடிவிட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். 15ம் தேதி திரும்பி வந்து பார்த்த போது, பட்டறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு 15 கிராம் தங்கம், 75 கிராம் வெள்ளி திருடப்பட்டிருந்தது. புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நிருபருக்கு மிரட்டல்; மூவர் மீது வழக்கு

கோவை: மயிலம்பட்டியை சேர்ந்தவர் வேலுமணி, 48; நாளிதழ் நிருபர். சுய உதவிக்குழுக்கள் மோசடி குறித்து செய்தித்தாளில் இவர் அக்.26ல் அளித்த செய்தியில் வங்கி அதிகாரி ஒருவருக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மூன்று பேர் வேலுமணியை கலெக்டர் அலுவலகம் முன் மிரட்டியதாக அளித்த புகாரின்படி செந்தில்குமார், விஜயகுமார் மற்றும் அடையாளம் தெரிந்த நபர் மீது வழக்கு பதிந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

பைக் விபத்தில் மனைவி பலி

போத்தனுார் : கரும்புக்கடை ஆப்பிள் கார்டனை சேர்ந்தவர் பெரோஸ்கான், 42; மனைவி ஜன்னதில் பிரதோஸ், 37 உடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். போத்தனுார் ரோடு கருப்பராயன் கோயில் அருகே பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு பைக் மோதியது. துாக்கி வீசப்பட்ட ஜன்னதில் பிரதோஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த பெரோஸ்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பைக்கை ஓட்டி வந்த போத்தனுார் பரத் நகரை சேர்ந்த ஹரிஹரன், 19 மீது வழக்கு பதிந்தனர்.

புகையிலை விற்ற இருவர் கைது

நல்லாம்பாளையம் : கவுண்டம்பாளையம் போலீசார் சோதனையில் நல்லாம்பாளையத்தில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை விற்பது தெரிந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிரசாத், 25 என்பவரை கைது செய்தனர். 271 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

* சரவணம்பட்டி போலீசார் சின்னவேடம்பட்டி பகுதியில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த சின்னவேடம்பட்டியில் தங்கியுள்ள ராமநாதபுரம் திருவாகுடியை சேர்ந்த காஸ்காரன், 36 என்பவரை கைது செய்தனர். 130 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us