தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்:மேட்டுப்பாளையம் « previous

 கிரைம் கார்னர்:மேட்டுப்பாளையம் « previous

 கிரைம் கார்னர்:மேட்டுப்பாளையம் « previous


ADDED : செப் 18, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காப்பர் கம்பி திருடியவர் கைது

சிங்காநல்லுாரை சேர்ந்த அருள் குமரன், 53, அப்பநாயக்கன்பட்டியில், அலுமினிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் பவுண்டரி நடத்தி வருகிறார்.

இரு ஆண்டுகளாக பவுண்டரி செயல்படாமல் பூட்டி இருக்கிறது. நேற்று முன்தினம் காலை கம்பெனிக்குள் நுழைந்த வாலிபர், காப்பர் கம்பிகளை திருடி சென்றதை, கண்காணிப்பு கேமிரா காட்சி வழியாக பார்த்த அவர், கம்பெனிக்கு வந்துள்ளார். அங்கிருந்த வாலிபரை பிடித்து, சூலுார் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் சமதர்மபுரத்தை சேர்ந்த நிதின், 21 என்பதும், திருவாரூர் மாவட்டம் வடுவூர், மன்னார்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் டவுன் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. 2.5 கிலோ காப்பர் கம்பிகளை பறிமுதல் செய்த போலீசார், நிதினை சிறையில் அடைத்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

அன்னுார் எஸ்.ஐ., அழகேசன் தலைமையில், போலீசார் நேற்று, கெம்பநாயக்கன் பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்பகுதியில் இருந்த சக்திவேல் ரெஸ்டாரண்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஐந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பதுக்கி வைத்திருந்த கெம்பநாயக்கன்பாளையம், காந்திமதி நகரைச் சேர்ந்த கார்த்திக், 36 கைது செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பீகார் சிறுமி பலி

பீகார் மாநிலம், மாதப்பூரை சேர்ந்தவர் சுகையா ஷா, 43, கெம்பநாயக்கன்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி பவுண்டரியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மில் தொழிலாளி.

இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள். நேற்று முன் தினம் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது மகள் ரெக்னாஸ் காட்டூன், 12, அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.

போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மீட்க முயற்சித்தனர். எனினும், இருளில் மீட்க முடியவில்லை. நேற்று காலை சிறுமியின் சடலத்தை மீட்டனர். அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us