தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாமியாருக்கு கத்திக்குத்து

மாமியாருக்கு கத்திக்குத்து

மாமியாருக்கு கத்திக்குத்து


UPDATED : ஜூலை 19, 2026 08:08 PM

ADDED : ஜூலை 19, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 08:08 PM ADDED : ஜூலை 19, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சுண்டப்பாளையம்: தொண்டாமுத்துார் ரோடு, சுண்டபாளையத்தை சேர்ந்த எபினு, 41. தனது சகோதரியுடன் வசிக்கிறார். சகோதரியின் மருமகன், தொண்டாமுத்துாரை சேர்ந்தவர் சரத்குமார், 31. இவர் அடிக்கடி மதுபோதையில் சொத்துக்காக மாமியார் வீட்டின் முன் சண்டையிட்டுள்ளார். சம்பவத்தன்று கத்தியை வைத்து குத்தி மிரட்டியுள்ளார். காயமடைந்த மாமியார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எபினு அளித்த புகாரின் பேரில், போலீசார் சரத்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பைக் திருட்டு; இருவர் கைது

ஆர்.எஸ்.புரம்: மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 38. தனது பைக்கை புரூக் பீல்டு மால் முன் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மாயமாகியிருந்தது. ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணையில், கரும்புக்கடை அலாவுதீன், 46 , அபாஸ், 48 ஆகியோர் வாகனத்தை திருடியது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் வாகனத்தை மீட்டனர்.

புகையிலை பொருள் விற்பனை

கோவை: மாநகர போலீசார் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்றவர்களை கைது செய்தனர். அதன்படி, ஒண்டிபுதுார் பூதேஸ்வரி, 29 உக்கடம் அயுப் அன்சாரி, 31, சாய்பாபாகோவில், கருணாநிதி, 50, இடையர்பாளையம் பாஸ்கர், 67 மற்றும் ஆறுமுகராஜ், 56, கீரணத்தம் நாகராஜ் 61 ஆகியோரை கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை; இருவர் கைது

கோவை: ராமநாதபுரம் போலீசார் ரோந்து பணியின் போது, ரெட்பீல்டு புலியகுளம் சாலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புலியகுளம் சார்லஸ், 30 என்பவரை கைது செய்தனர்.

* பீளமேடு போலீசார் ரோந்து பணியின் போது, சவுரிபாளையம் தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். பட்டணத்தை சேர்ந்த பூசாரி மணி என்ற அவரிடம், 1.25 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்தனர்.

போலீஸ்காரர் சஸ்பெண்ட்

கோவை: வெள்ளக்கிணறு அருகே, மாணவர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்த உதவி பேராசிரியையை, விசாரணை நடத்தவேண்டும் என கூறி தனியாக அழைத்து சென்று துடியலுார் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் வினோத்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்து மாநகர கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us