தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாணி பொடி விற்பனை:ஒருவர் கைது

சாணி பொடி விற்பனை:ஒருவர் கைது

சாணி பொடி விற்பனை:ஒருவர் கைது


UPDATED : ஜூலை 26, 2026 07:16 PM

ADDED : ஜூலை 26, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 07:16 PM ADDED : ஜூலை 26, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.புரம் போலீசார் சோதனையின் போது, பூமார்க்கெட் சாலையில் கெமிக்கல் விற்பனை செய்யும் கடைகளில் மஞ்சள் சாணி பொடி விற்பனை செய்வது தெரியவந்தது. வேலாண்டிபாளையத்தை சேர்ந்த, தினகரன், 63 என்பவரை போலீசார் கைது செய்தனர்.

போன் பறிக்க முயன்ற இருவர் மீது வழக்கு

சிங்காநல்லுார் கக்கன் நகரை சேர்ந்த நாகராஜ், 45 டூவிலர் கன்சல்டன்சி நடத்துகிறார். திருச்சி சாலையில் பேக்கரி ஒன்றில் குடும்பத்தாருடன் டீ குடித்துக்கொண்டு இருந்தார். அங்கு வந்த, விஜய் வேந்தன், ராமு தகராறு செய்து போனை பறிக்க முயற்சித்துள்ளனர். தர மறுத்ததால், பீர்பாட்டிலால் தாக்க முயன்றனர். தடுக்க முயன்ற நாகராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.

எலக்ட்ரானிக் கடையில் 6000 ரூபாய் திருட்டு

சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில், ராஜஸ்தானை சேர்ந்த நாராயணன் லால், 48 எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இரவு கடையை மூடி சென்று, மறுநாள் திறந்த போது, 6000 ரூபாய் பணம் திருட்டு போயிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு:போலீசார் விசாரணை

ஒண்டிபுதுாரை சேர்ந்தவர் நான்சி, 50 அதே பகுதியில் உள்ள மோட்டார் நிறுவனத்தில் பிட்டர் ஆக பணிபுரிகிறார். மாலையில் மளிகை கடைக்கு சென்றபோது, டூவிலரில் ஹெல்மெட் அணிந்துவந்த ஒருவர் தாலி சங்கிலியை பறித்து சென்றார். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

வேகமாக பைக் ஓட்டியவர் விபத்தில் மரணம்

குனியமுத்துாரை சேர்ந்த சுஹாலி சித்திக், 20. திருச்சி சாலை ஒண்டிபுதுார் பகுதியில் வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். வேகத்தால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜூலை 25 அதிகாலை உயிரிழந்தார்.

கஞ்சா விற்றதாக பீகார் இளைஞர் கைது

சாய்பாபாகாலனி போலீசார் ஆய்வின் போது, ரயில்நிலையம் குட்செட் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, பீகாரை சேர்ந்த அஜய்குமார், 19 என்பவரை கைது செய்தனர். அவர் தற்போது வசிக்கும் தொப்பம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் ஆய்வு செய்தனர். 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மருத்துவ மாணவரிடம் சங்கிலி பறிப்பு

திருப்பூரை சேர்ந்த சஞ்சய், 22; கோவை தனியார் மருத்துவ கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். பீளமேடு எல்லைத்தோட்டம் பகுதியில், காலை 9:30 மணியளவில் நடந்து சென்றபோது டூவீலரில் வந்த மூவர் வழிமறித்தனர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 110 கிராம் வெள்ளி சங்கிலி மற்றும் வெள்ளி இடுப்பு கயிற்றை பறித்து தப்பினர். புகாரில் பேரில் பீளமேடு போலீசார் சி.சி.டி.வி., ஆதாரங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற மூவர் கைது

*ராமநாதபுரம் போலீசார் ரோந்து பணியின் போது, சுங்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பரத்காந்தி, 31 என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து, 210 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

*மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ராமநாதபுரம் சண்முகா நகரில் கஞ்சா விற்ற கணபதி கவுதம், 25 என்பவரை கைது செய்து 1.500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* ரத்தினபுரி போலீசார் நாராயணசாமி லே அவுட் பகுதியில் கஞ்சா விற்ற பீகாரை சேர்ந்த ராம் ரத்தன் ராம், 27 என்பவரை கைது செய்தனர். 3.500 கிராம் கஞ்சா, 700 ரூபாய், எடை இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us