தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புகையிலை பொருள் விற்ற 4 பேர் கைது

புகையிலை பொருள் விற்ற 4 பேர் கைது

புகையிலை பொருள் விற்ற 4 பேர் கைது


UPDATED : ஜூலை 29, 2026 05:38 PM

ADDED : ஜூலை 29, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2026 05:38 PM ADDED : ஜூலை 29, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செல்வபுரம்: அசோக்நகர் ரவுண்டானா பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.

சரவணம்பட்டி: அத்திப்பாளையம் ஜங்ஷன், விளாங்குறிச்சி ரோடு, சின்னவேடம்பட்டி பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் புகையிலை பொருட்களை விற்றதாக மணியகாரம்பாளையம் கணேஷ், கணபதி கார்த்திக், மோகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கஞ்சா விற்ற 3 பேர் பிடிபட்டனர் வடவள்ளி: சிறுவாணி ரோட்டில், 2 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த பீகார் அமீத்குமார் சிங்கை போலீஸ் கைது செய்தனர்.

காட்டூர்: காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில், 1.20 கிலோ கஞ்சாவுடன் நின்ற ஈரோடு செந்தில்குமார், கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்: சுங்கம் பை பாஸ் ரோட்டில் கஞ்சா விற்ற சூர்யாவை கைது செய்தனர்.

5 பேர் மீது குண்டர் சட்டம் கஞ்சா விற்றதாக ஜூலை 1ம் தேதி பிடிபட்ட ராகுல், ஜான் ஜோசப், முகமது அனஸ், ராம்பிரசாத், பாலாஜி 28 ஆகியோர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

குண்டாசில் மூவர் கைது

காந்திபுரம்: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சுந்தர்,44 குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

போதை மாத்திரை விற்றதாக உக்கடம், என்.எச்.ரோட்டை சேர்ந்த அப்துல்ரகுமான்,32, கஞ்சா விற்றதாக ஈச்சனாரி, ஐயப்பா நகரை சேர்ந்த தமிழரசன்,26, கைது செய்யப்பட்டனர். இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெண் கழுத்தறுப்பு; மாணவனுக்கு வலை

பாலத்துறை: குமிட்டிபதியை சேர்ந்தவர் கணேஷ் மனைவி ரேவதி, 26. இரவு வீட்டிலிருந்தார். அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு சிறுவன் மொபைல்போன் கேட்டுள்ளார். கொடுக்க மறுத்ததால், தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் ரேவதியின் கழுத்தை அறுத்துள்ளார். ரேவதி சத்தமிடவும் அருகிலிருந்தோர் வந்தனர். சிறுவன் தப்பியோடினார். ரேவதியை மருத்துவமனையில் சேர்த்தனர். க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us