தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : செப் 01, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிலாளிக்கு பாட்டில் குத்து  கோவை: புதுக்கோட்டையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்,48. கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள டாஸ்மாக் பார் காவலாளி. இவருக்கும் பாரை சுத்தம் செய்யும் தொழிலாளி அர்ஜூல் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. சுப்பிரமணியன் பாட்டிலால் அர்ஜூல் வயிற்றில் குத்தினார். காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.

90 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்  ரேஸ்கோர்ஸ்: பா.நா.பாளையம் பெட்டிக்கடை ஒன்றில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு புகையிலை பொருட்களை பதுக்கி விற்றது தெரிந்தது. அங்கிருந்த, 90 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மணிகண்டன், 43, கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

பொது இடத்தில் மது குடித்தவர் மீது வழக்கு சரவணம்பட்டி: கணபதி எப்.சி.ஐ., ரோட்டில் சரவணம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பொது இடத்தில் மது குடித்த கார்த்திக்கை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.

பிளாக்கில் மது விற்றவர் கைது சுந்தராபுரம்: மதுவிலக்கு பிரிவு போலீசார், சுந்தராபுரம்– மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது மது விற்ற நாகராஜபுரத்தை சேர்ந்த புகழேந்தி, 36, என்பவரை கைது செய்தனர். 26 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை பொருட்கள் பறிமுதல் சரவணம்பட்டி: போலீசார் ரோந்து பணியின் போது, நான்காவது வீதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் உள்ள வீடுகளை சோதனையிட்டனர். ஒரு வீட்டின் அறையில் 200 கிலோ புகையிலை பதுக்கி இருப்பது தெரிந்து பறிமுதல் செய்தனர். பார்த்திபன் என்ற நபர் அங்கு தங்கியிருந்ததாக தெரிந்தது. சி.சி.டி.வி. பதிவு ஆய்வு செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us