ADDED : செப் 24, 2026 07:22 PM
கத்தியை காட்டி பணம் பறிப்பு ராமநாதபுரம்: பங்கஜாமில் ரோடு டாஸ்மாக் பார் சப்ளையர் புதுக்கோட்டை பாண்டியராஜன். மது குடிக்க வந்த, அம்மன்குளம் வினோத் பணம் தராமல் மது கேட்டு தகராறு செய்தார். தொடர்ந்து நள்ளிரவில் ரோட்டில் நடந்து சென்ற பாண்டியராஜனிடம் கத்தியை காட்டி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1150ஐ பறித்துக்கொண்டு தப்பினார். புகாரின் பேரில் வினோத்தை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.
* கோவையில் வசிக்கும் தென்காசியை சேர்ந்த அஷ்ரப் அலி சமையலராக பணிபுகிறார். பணி முடிந்து இரவு சுங்கம் ரோட்டில், நடந்து சென்றபோது, அம்மன்குளத்தை சேர்ந்த மோசஸ் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த, ரூ.330 பறித்துக் கொண்டு தப்பினார். போலீசார் மோசஸ்ஸை கைது செய்தனர்.
* ரத்தினபுரி: காந்திபுரம் ஜெயக்குமார், ரத்தினபுரியில் ரோட்டோர கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பணியின் போது, சிவானந்தா காலனி ஆகாஷ் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.770 பறித்துக் கொண்டு தப்பினார். போலீசார் அவரை கைது செய்தனர்.
மதுபோதையில் தகராறு உக்கடம்: கெம்பட்டி காலனியில் வசிப்பவர்கள் ஷாஜகான், ஹக்கீம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டி கேட்ட ஷாஜகானை பீர்பாட்டிலால் தாக்கியதாக, ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.
பைக் திருட்டு சரவணம்பட்டி: மருதம் நகரில் வசிக்கும், சுரேந்தர் தனது பல்சர் பைக்கை வீட்டிற்கு வெளியில் நிறுத்தி விட்டு சென்றார். சற்று நேரத்தில் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
