/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கியுரியோ எக்ஸ் ஆய்வக திறப்பு விழா
/
கியுரியோ எக்ஸ் ஆய்வக திறப்பு விழா
ADDED : ஜூலை 03, 2025 09:02 PM

கோவை; கோவை, பேரூர் அருகிலுள்ள கிக்கானி குளோபல் அகாடமியில், கியுரியோ எக்ஸ் இன்னோவேஷன் ஆய்வகத் திறப்பு விழா நேற்று நடந்தது.
முதல் பார்ட்னர்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் குமார் வேம்பு ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
அவர் பேசுகையில், '' அனுபவங்கள் வாயிலாக, கற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும். மாணவர்கள் ஆர்வமுடன் கேள்விகளை எழுப்பவேண்டும். ஆய்வில் ஈடுபட்டு, தனிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொண்டு முன்னேறவேண்டும்,'' என்றார்.
ஆய்வக திறப்பு விழாவில், பள்ளியின் தாளாளர் துஷார் கிக்கானி, மெட்டாஸ் ஏஜ் நிர்வாகி அகிலா முத்துராமலிங்கம், பள்ளி முதல்வர் ஷாலினி, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.