தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேண்டுமென்றே ‘கரன்ட் கட்’ அமைச்சர் ராஜ்குமார் ஆவேசம்

வேண்டுமென்றே ‘கரன்ட் கட்’ அமைச்சர் ராஜ்குமார் ஆவேசம்

வேண்டுமென்றே ‘கரன்ட் கட்’ அமைச்சர் ராஜ்குமார் ஆவேசம்


UPDATED : அக் 15, 2026 12:41 AM

ADDED : அக் 15, 2026 12:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:41 AM ADDED : அக் 15, 2026 12:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: ‘‘நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மின்தடை ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. இதை யார் செய்கின்றனர், எதற்காக செய்கின்றனர் என்பது தெரியவில்லை. அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் ராஜ்குமார் பேசினார்.

தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், வீட்டுவசதி துறை அமைச்சருமான ராஜ்குமார், நேற்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தர்மபுரி மாவட்டம் வந்தார். தர்மபுரி புதிய கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பேசியபோது காலை, 11:58 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனடியாக ஜெனரேட்டரை ஆன் செய்த பின், நிகழ்ச்சி தொடர்ந்தது.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்குமார் பேசுகையில், ‘‘ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின், 2.0 திட்டத்தை விரைவில் கொண்டு வர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மின்தடை ஏற்படுவது தொடர்கிறது. இதை யார் செய்கின்றனர்; எதற்காக செய்கின்றனர் என்பது தெரியவில்லை. அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us