/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கறிவேப்பிலை கிலோ ரூ.15க்கு அறுவடை
/
கறிவேப்பிலை கிலோ ரூ.15க்கு அறுவடை
ADDED : செப் 24, 2024 11:54 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் கறிவேப்பிலை பயிர் செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் வரை, கறிவேப்பிலை மிக குறைந்த விலைக்கு விற்பனை ஆனது. தற்போது கிலோவுக்கு, ஐந்து ரூபாய் விலை உயர்ந்து உள்ளது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்காம்பு கறிவேப்பிலை நல்ல மணமும், சுவையும் நிறைந்தது. தினமும் இப்பகுதியில் அறுவடை செய்து, 20 லிருந்து, 25 டன் வரை, பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் வரை, தோட்டத்தில், ஒரு கிலோ,10 ரூபாய்க்கு அறுவடை செய்யப்பட்டது. இந்த மாதம் கிலோவுக்கு, 5 ரூபாய் உயர்ந்து 15 ரூபாய்க்கு அறுவடை செய்யப்படுகிறது.