/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி வளாகம் அருகே குப்பையால் பாதிப்பு
/
பள்ளி வளாகம் அருகே குப்பையால் பாதிப்பு
ADDED : ஆக 29, 2025 09:27 PM

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி, சமத்துார் ராமஐயங்கார் நகராட்சி பள்ளி வளாகம் அருகே, குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதாரம் பாதிக்கிறது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், குடியிருப்புகள் மட்டுமின்றி வங்கிகள், ஓட்டல்கள் என, பலதரப்பட்ட வணிகக்கடைகள் காணப்படுகின்றன. அவ்வகையில், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு, அகற்றப்படுகின்றன.
இருப்பினும், பலர், ரோட்டோரத்தில் குப்பை வீசிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, சமத்துார் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே, குப்பை கொட்டப்படுகின்றன. அங்கு, குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'தற்போது, இப்பகுதியில் உணவு சார்ந்த தள்ளுவண்டி கடைகள் செயல்படுகின்றன. அவ்வாறு தெரிந்தும், குடியிருப்புகள் மற்றும் வணிகக் கடைகளைச் சேர்ந்தோர், குப்பையை கொட்டிச் செல்கின்றனர்.
அருகில், மேல்நிலை நீர்த்தொட்டியும், டிரான்ஸ்பார்மர் இருந்தும், பலர் விதிமீறலில் ஈடுபடுகின்றனர். பள்ளி வளாகம் அருகே குப்பை குவிப்பதால் சுகாதாரம் பாதிக்கிறது. இதை அகற்றுவதுடன், அத்துமீறலில் ஈடுபடுவோரை கண்டறிந்து தடுக்க வேண்டும்,' என்றனர்.

