/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் கொட்டப்படும் கழிவுகளால் பாதிப்பு
/
ரோட்டில் கொட்டப்படும் கழிவுகளால் பாதிப்பு
ADDED : நவ 20, 2025 02:16 AM
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே சோழனூர் செல்லும் ரோட்டோரம் நீர் தேக்க பகுதி உள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி சிலர் மீன் மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை ரோட்டோரம் கொட்டி வந்தனர். தற்போது ரோட்டின் நடுவில் கழிவை கொட்ட துவங்கியுள்ளனர்.
இதனால் இவ்வழியில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இங்கு இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த ரோட்டின் ஓரத்தில் இரு பகுதியிலும் உள்ள புதர்களை அகற்றம் செய்ய வேண்டும். இத்துடன், சேதம் அடைந்துள்ள இந்த ரோட்டை விரைவில் சீரமைப்பு செய்ய ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

