/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடையும் ஆளிறங்கு குழி மூடிகள்; நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு
/
சேதமடையும் ஆளிறங்கு குழி மூடிகள்; நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு
சேதமடையும் ஆளிறங்கு குழி மூடிகள்; நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு
சேதமடையும் ஆளிறங்கு குழி மூடிகள்; நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு
ADDED : ஆக 14, 2025 08:26 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடியை அவ்வப்போது கண்காணித்து பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம், கடந்த, 2016ம் ஆண்டு, 109.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, 170 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, சந்தை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அடைப்பு, சீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்காங்கே ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், சில பகுதிகளில் ஆள் இறங்கும் குழியின் மூடி, அடிக்கடி சேதமடைகிறது. இவை பெரும்பாலும் நடுரோட்டில் அமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
ராஜாமில் ரோடு, பெருமாள்செட்டி வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆளிறங்கு குழியின் மூடிகள், சேதமடைந்த நிலையில் உள்ளன.
இருசக்கர வாகனத்தில் செல்வோர், நிலை தடுமாறி விழுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர், ஆளிறங்கு குழி மூடிகளைக் கண்காணித்து, சேதடைந்திருப்பதை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூறியதாவது:
ரோட்டின் நடுவே, பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது, ஆளிறங்கு குழியின் மூடி சேதமடைகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
ஆனால், சில நேரங்களில், பாதாள சாக்கடையில் இருந்து, கழிவுநீர் வெளியேறுவது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. அதேபோல, ரோட்டிற்கு சமமாக மூடியை அமைத்தால், வாகனங்களின் எடை, பாதிப்பை ஏற்படுத்தாது.
இவ்வாறு, கூறினர்.