/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவ மழையால் நிரம்பிய அணைகள் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
/
பருவ மழையால் நிரம்பிய அணைகள் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
பருவ மழையால் நிரம்பிய அணைகள் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
பருவ மழையால் நிரம்பிய அணைகள் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 27, 2024 10:59 PM

வால்பாறை, ; பருவமழையால், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில் இந்த ஆண்டு, கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை துவங்கியது. தொடர் மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த ஜூலை மாதம், 19ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதேபோல், காடம்பாறை அணை நிரம்பியதையடுத்து, மேல்ஆழியாறு அணை வழியாக ஆழியாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை ஆகஸ்ட் மாதம் இறுதியில் தீவிரமடைந்த நிலையில், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையும் நிரம்பின.
கடந்த இரண்டு மாதங்களாக, வடகிழக்குப்பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்து, பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
வால்பாறையில் இந்த ஆண்டில் பெய்த தென்மேற்குப்பருவமழையினால், பி.ஏ.பி.,பாசன திட்டத்தின் கீழ் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியதால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சின்னக்கல்லார் 'டாப்'
தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லார் வால்பாறை அருகே உள்ளது. இந்த ஆண்டில் பெய்த தென்மேற்குப் பருவமழையால், தமிழகத்தில் ஐந்து இடங்களில் மழைப்பொழிவு அதிகமாக பெய்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சின்னக்கல்லாரில், 573.9 செ.மீ., சின்கோனா, 411 செ.மீ., நீலகிரி பந்தலுாரில், 442.1 செ.மீ., நெல்லை மாவட்டம் நாலுமுக்கு, 412.8 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்னக்கல்லாரியில், 573.9 செ.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.