/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டான்டீ' தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
'டான்டீ' தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : ஆக 11, 2025 08:46 PM

வால்பாறை; கோரிக்கைகளை வலியுறுத்தி சின்கோனா 'டான்டீ' தேயிலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா (டான்டீ) தேயிலை தோட்டம். இங்கு, லாசன், ரயான் ஆகிய இரு கோட்டங்களிலும், 389 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர்களுக்கு, 2021ம் ஆண்டு முதல் 2025 வரை மருத்துவ விடுப்பு நிலுவைத்தொகை வழங்கவில்லை. 'டான்டீ' தேயிலை தோட்டம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் போதிய அடிப்படை வசதி இல்லாமலும், வனவிலங்குகள் தொல்லையாலும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
'டான்டீ' லாசன் கோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் செல்வதால் அவர்களுக்கு, ஓய்வூதிய தொகையாக, 10 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக 'டான்டீ' தேயிலை தோட்ட அலுவலகத்தின் முன் நேற்று காலை தொழிலாளர்கள் திரண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனைமலை அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் வீரமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கேசவமருகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். த.வெ.க. வால்பாறை நகர செயலாளர் ஆண்ட்ரூஸ், இணை செயலாளர் சையதுஅலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

